News's blog

பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்

சென்னை: ஜெயலலிதா வழியில் நடப்போம் என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் துணை முதல்வர் ஓபிஎஸ், தற்போது பிரதமரின் அறிவுரையின் படிதான் அதிமுக இணைப்பு நடந்தது என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். மேலும் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்தீபன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், கட்சியின் நலன்கருதி அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அறிவுறுத்தினார். அதற்கு நான் ஒப்புக் கொண்டேன்.

துணை முதல்வர் பதவி அப்போது அவரிடம் அதிமுகவின் இரு அணிகளையும் இணைத்து கொள்கிறேன். ஆனால் அமைச்சரவையில் நான் இடம் பெற மாட்டேன். ஜெயலலிதா எனக்கு எல்லா பதவிகளையும் கொடுத்து அழகு பார்த்துவிட்டார் என்றேன். அதற்கு மோடியோ நீங்கள் கட்டாயம் அமைச்சரவையில் இருக்கத்தான் வேண்டும் என்றார், அதனால்தான் நான் துணை முதல்வராக உள்ளேன் என்று ஒரு பெரிய உண்மையை போட்டு ஓபிஎஸ் உடைத்துவிட்டார்.

இரு கைகளையும் கோர்த்த ஆளுநர் அதிமுக இணைந்ததில் பெரும் பங்கு பாஜகவுக்கு உண்டு என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மேலும் தங்கள் ஆட்சியை காப்பாற்ற பாஜக கூறுவதை அதிமுக அரசு கேட்பதாகவும் வெளிப்படையாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்ற விழாவில் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் கைகளை பிடித்து சேர்த்து வைத்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இது சரியா?
ஜெயலலிதா வழியில் ஆட்சியும் கட்சியும் நடக்கிறது என்று அடிக்கடி கூறிக் கொள்ளும் ஓபிஎஸ், ஜெயலலிதா விரும்பாத வகையில் கட்சியில் மோடியின் தலையீட்டின்படி அவரது அறிவுரையை பின்பற்றியது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டான்ஸி முறைகேடு, சொத்து குவிப்பு வழக்குகள் என எத்தனை வழக்குகள் ஜெயலலிதா மீது இருந்தாலும் அவற்றுக்காக யாருடனும் சென்று கூட்டணி வைத்ததோ, தேடி சென்று அறிவுரையை கேட்டதோ இல்லை.

லேடியா? மோடியா?
ஜெயலலிதா இருந்த போது அவர் எதிர்த்த திட்டங்களை இதுபோல் நாட்டாமை செய்ததன் மூலமாக மோடி அரசு சாதித்து கொண்டது. இதுதான் ஜெயலலிதா வழியா. கடந்த மக்களவை தேர்தலில் நண்பராக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர் வேட்பாளர் என்று கருதி அந்த மோடியா? இல்லை இந்த லேடியா ? என்று ஜெயலலிதா கர்ஜித்தது இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவை கேட்க வேண்டியவர்களுக்கு கேட்காமல் போனது ஏனோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி இவ்வளவு தெளிவாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கலாமே. தமிழை ஹைகோர்ட் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, ஆனால் உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டி மத்திய அரசு அதனை தட்டிக் கழித்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில்பாஜகபினாமிஆட்சிநடைபெறுகிறதுஎன்பதை.பன்னீர்செல்வம்உறுதிசெய்துள்ளார்என்றுஆற்காடு ஆர்.வி. மணிவண்ணன் தெரிவித்தார். இதுகுறித்துஇன்றுஅவர்கூறுகையில், ஜெ.மறைந்தமுதல்நாளில்இருந்தேநான்இங்குபாஜகபினாமிஆட்சிநடக்கிறதுஎன்றுதான்கூறிவந்தேன். முதலில்மறைத்தாலும்இப்போதுஓபிஎஸ்ஏற்றுக்கொண்டுள்ளார்.அதிமுகபிளவுபட்டதும்மோடியால்தான். மோடிமற்றும்அமித்ஷாடைரக்ஷன்படிதான், தமிழகத்தில்அதிமுகஆட்சிநடந்துவருகிறது. பன்னீர்செல்வம்இப்போதுஅதைபகிரங்கமாகஒப்புக்கொண்டுள்ளார். இவ்வாறுஅவர்தெரிவித்தார். மோடிகூறியதால்தான்அதிமுகஅமைச்சரவையில்இணைந்தேன்எனபன்னீர்செல்வம்நேற்றுஅதிமுகஆலோசனைகூட்டத்தில்பேசியஉரைதமிழகஅரசியலில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: பிரதமர் மோடியின் செல்வாக்கு அகில இந்திய அளவில் பெரும் அடி வாங்கியுள்ளது லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெரும் ஆரவாரத்துடன் ஆட்சியைப் பிடித்த உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 20 சதவீத சரிவை மோடி செல்வாக்கு கண்டுள்ளது. லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் கடந்த 2017ம் ஆண்டு மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பை நடத்தியது. தற்போது 2வது கருத்துக் கணிப்பை அது நடத்தியுள்ளது. அதில் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உ.பியில் அது பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இதுதான் பாஜகவின் தமிழக நிலைமை தமிழகத்திலும் பாஜகவுக்கு பாதகமான நிலையே தொடர்கிறது. அங்கு முதல் கருத்துக்கணிப்பில் ஆதரவு 31, அதிருப்தி 55 என இருந்தது. தற்போது அது 33, 52 என உள்ளது.

பரிதாப நிலையில் குஜராத் குஜராத்தில் பாஜக நிலைமை பரிதாபமாக உள்ளது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 72, அதிருப்தி 20% என இருந்தது. தற்போது அது 57, 35 என மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலிலேயே பாஜகவின் தடுமாற்றத்தை மக்கள் கண்டனர்.

பயங்கர வீழ்ச்சியில் கேரள பாஜக பாஜகவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 30, அதிருப்தி 54 என இருந்தது. தற்போது அதிருப்தி அதிகமாகி 66% சதவிதமாக உள்ளது. ஆதரவு 24%மாக குறைந்து போய் விட்டது.

உ.பியிலும் அடி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. அங்கு முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 71, அதிருப்தி 21 என இருந்தது. தற்போது ஆதரவு 55 சதவீதமாக குறைந்து விட்டது. அதிருப்தி 37 சதவீதமாக உயர்ந்து விட்டது.

கர்நாடகாவிலும் பலத்த அடி கர்நாடகாவில் முதல் கருத்துக் கணிப்பில் ஆதரவு 73%, அதிருப்தி 20% என இருந்தது. தற்போது அது 51%, 40% என மாறியுள்ளது. விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு இது கெட்ட செய்தியாகும்.

ஆந்திராவிலேயே அடி ஆந்திராவில் 2017ல் நடத்தப்பட்ட முதல் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கான ஆதரவு 48 சதவீதமாகவும், அதிருப்தி 38 சதவீதமாகவும் இருந்தது. தற்போது அது 37-52 என மாறியுள்ளது.

பாஜக செல்வாக்கு 66% சரிவு : ஆற்காடு ஆர். வி. மணிவண்ணன் கருத்து obvii.com சர்வே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது

பாஜகஆதரவில்சரிவு.

நாளைலோக்சபாவுக்குதேர்தல்நடந்தால்பாஜகவுக்கு34 சதவீதவாக்குகள்கிடைக்கும்எனஇந்தகருத்துக்கணிப்புதெரிவித்துள்ளது. பாஜகமீதானமக்களின்சாதகமானபார்வையிலும்சரிவுஏற்பட்டுள்ளதாகவும்கருத்துக்கணிப்புதெரிவித்துள்ளது.


விவசாயிகள்கடும்கோபம்விவசாயிகள்,
தொழிலாளர்கள்
, வர்த்தகர்கள்ஆகியோரின்அவநம்பிக்கையைவெகுவாகசம்பாதித்துள்ளதுபாஜக. பாஜகவைவிடஐக்கியமுற்போக்குக்குகூட்டணிஅரசுதங்களின்கவலைகளைபரிவுடன்கவனித்ததாகவிவசாயிகள்கருதுகிறார்கள்எனகருத்துக்கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறதரப்பினரிடமும்கூடஇதேகருத்துமேலோங்கியுள்ளது.


தென்னிந்தியாவில்ராகுலுக்குஆதரவு18 முதல்25 வயதுக்குட்பட்டோரிடம்பாஜகவுக்குஅதிகஆதரவுகாணப்படுகிறது. இருப்பினும்கடந்தஎட்டுமாதங்களில்இருந்ததைவிடஇப்போதுஇதன்அளவுகுறைந்துள்ளதையும்காணமுடிகிறது. தென்இந்தியாவில்ராகுல்காந்தியின்செல்வாக்குஅதிகம்உள்ளது. மோடிக்குதென்இந்தியர்களிடம்ஆதரவுகுறைந்தேஉள்ளது. பிரதமர்வேட்பாளருக்குராகுல்காந்திக்கு27 சதவீதம்பேரும், மோடிக்கு24 சதவீதம்பேரும்ஆதரவுதெரிவித்துள்ளனர்


மோடிஅரசுமீதுஅதிருப்திஅதிகரிப்புமோடிஅரசின்மீதானதிருப்தியும்மக்களிடையேகுறைந்துள்ளதுதெரியவந்துள்ளது. முதல்கருத்துக்கணிப்பில்தெரிவிக்கப்பட்டதிருப்தி64%ஆகும். ஆனால்தற்போதுஇது51 சதவீதமாககுறைந்துவிட்டது. அதிருப்திஅளவானது27% என்பதிலிருந்து40 சதவீதமாகஉயர்ந்துள்ளது.

தமிழ்தான் பழமையான மொழி, ஒப்புக்கொண்ட மோடி


டெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பள்ளி மாணவர்களுடனான 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு பேசினார். மோடி மேலும் கூறுகையில், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன். நாம் பல மொழிகளை கற்க வேண்டும்.


பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழ்தான் மிகவும் பழமையான மொழி. சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகானதும் கூட. ஆனால் என்னால் வணக்கம் என்ற ஒரு தமிழ் வார்த்தையை மட்டுமே பேச முடிகிறது. தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் தேர்வை கண்டு அஞ்ச வேண்டாம். நான் கூட அடுத்த வருடம் தேர்தல் என்ற பெயரில் தேர்வு எழுதப்போகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார். இதனிடையே தமிழ்தான் பழமையான மொழி என மோடி கூறியதற்கு வட இந்தியர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கடுப்பு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கன்னட நெட்டிசன் ஒருவர் சமஸ்கிருதம்தான் பழமையான மொழி, அதற்கு பிறகு கன்னடம்தான் பழமையான மொழி என சிரிக்காமல் சீரியசாக டிவிட் செய்துள்ளார். தமிழ் நெட்டிசன்கள் இதை வரவேற்று, அதற்கான ஆதாரங்களை டிவிட் செய்து வருகிறார்கள்.

காவிரியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.காவிரி தீர்ப்பு: கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ரத்து.

டெல்லி: காவிரி நதிநீரை எந்த ஒரு மாநிலமும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோர முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. நூற்றாண்டுகளாக நீடிக்கிறது காவிரி நதிநீர் பிரச்சனை. இதற்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 192 டி.எம்.சி.நீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இத்தீர்ப்பை எதிர்த்து கூடுதல் நீர் கோரி தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை அண்மையில் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் காவிரி வழக்கில் காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க தொடங்கியது. அப்போது காவிரி நீரை எந்த ஒரு மாநிலமும் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்,...

Archives