User blogs

Reporter
தீப்பிடித்து எரிந்த வீட்டின் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிர்பிழைத்த பெண்கள்ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியா மகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜன்னல் வழியே பெண்கள் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர். அட்லாண்டா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அங்குள்ள வீடு ஒன்றின் கதவு தீப்பற்றி கொண்டதால் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 2 பெண்களை ஜன்னலின் வழியே குதிக்கும்படி  அங்கிருந்த இளைஞர்கள் அறிவுறுத்தினர். 
இதன்படி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்களை இளைஞர்கள் தங்களது கைகளை கோர்த்து காப்பாற்றினர். இந்த பயங்கர தீ விபத்தில் 11 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் உடைமைகளை இழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Reporter Jul 2 '15
Reporter
மெக்சிகோவில் முதலைக் குட்டியை திருமணம் செய்த மேயர்மெக்சிகோ: மெக்சிகோவில் வெண்ணிறத்தில் மணமகள் ஆடை அணிவித்து ஜோடிக்கப்பட்ட முதலைக் குட்டியை மேயர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள வினோத நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மீனவ கிராமமான சான்பெட்ரோ ஹவா மெலுகாவில் அறுவடை செழிக்கவும், பருவநிலை சாதகமாக நிலவி மீன்பிடி தொழில் சிறக்கவும் வேண்டி பாரம்பரிய முறைப்படி இந்த வினோத திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமகள் போன்ற வெண்ணிற உடையில் அலங்கரிக்கப்பட்ட முதலை குட்டியை அந்நகர மேயர் ஜோயல் திருமணம் செய்து கொண்டார். 
மரியா இசபெல் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த முதலைக்குட்டி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திறு திறுவென முழித்துக் கொண்டிருந்தது. பின்னர் மரியாவை கையில் ஏந்திய படி ஊர்வலமாக வந்த மேயரும் மீனவ கிராமத்தினரும் இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடினர்.

தங்களது மூதாதையர்களின் நடைமுறைகளில் நம்பிக்கை இருப்பதாகவும், விலங்குகளை திருமணம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பதை 1789-ம் ஆண்டு அப்பகுதியில் வாழ்ந்த பண்டைய கால இந்தியர்களிடம் இருந்து கற்றுறுக்கொண்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
Reporter Jul 2 '15
Reporter
கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக முக்கிய துறைகள் வளர்ச்சி 4.4 சதவீதமாக அதிகரிப்புபுதுடெல்லி: நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த மே மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் முக்கிய 8 தொழில் துறைகளாக சிமென்ட்:நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, மின்சாரம் ஆகியவை உள்ளன. கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் இந்த துறைகளின் உற்பத்தி 2.1 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 4.7 சதவீதமாக இருந்தது. துறைவாரியாக முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது நிலக்கரி உற்பத்தி 7.8 சதவீதம், கச்சா எண்ணெய் 0.8 சதவீதம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் 7.9 சதவீதம், உரங்கள் 1.3 சதவீதம், உருக்கு உற்பத்தி 2.6 சதவீதம், மின் உற்பத்தி 5.5 சதவீதம், சிமென்ட் உற்பத்தி 2.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. 

இவற்றில் கச்சா எண்ணெய், முந்தைய மாதத்தின் 2.7 சதவீத சரிவுடன் ஒப்பிடுகையில் ஓரளவே வளர்ச்சி அடைந்துள்ளது. இயற்கை எரிவாயு 3.1 சதவீதம் சரிவடைந்துள்ளது. முந்தைய மாதத்தில் இந்த சரிவு 3.6 சதவீதமாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி முந்தைய மாதத்தில் 2.9 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த மே மாதத்தில் 7.9 சதவீதம் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுபோல் உருக்கு, மின் உற்பத்தி ஆகிய துறைகள் வளர்ச்சிக்கு கைகொடுத்துள்ளன.  தொழில்துறை உற்பத்தி குறியீடு கணக்கிடுவதில் இந்த முக்கிய 8 துறைகளின் பங்களிப்பு 38 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Reporter Jul 2 '15
Reporter
பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு, டீசல் 71 காசு குறைப்புபுதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்புக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகளும் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவி–்த்துள்ளன. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து ரூ.66.62ஆகவும், டீசல் லிட்டருக்கு 71 காசு குறைந்து ரூ.50.22ஆகவும் இருக்கும். சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகள் குறைந்து ரூ.69.84  ஆகவும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் குறைந்து 53.52 ஆகவும் இருக்கும்.
 கடந்த மே 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13ம் டீசல் லிட்டருக்கு ரூ.2.71ம் உயர்த்தப்பட்டது. ஜூன் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.  கடந்த மாதம் 15ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 64 காசு உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 1.35 குறைக்கப்பட்டது. கடந்த முறை கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து இருந்தபோதிலும், பெட்ரோல் இறக்குமதி செலவை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் விலை குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் உள்ள மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதற்கேற்ப இதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Reporter Jul 2 '15
Reporter
வியாபாரிகளுக்கு கடன் அமேசான் புது திட்டம்சிகாகோ: ஆன்லைன் விற்பனை சூடுபிடித்து வரும் நிலையில், இ-காமர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு உத்திகளை கடைப்பிடிக்கின்றன. தள்ளுபடி அறிவிப்புகளோடு புதுமையான பொருட்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அமேசான் நிறுவனம், நடப்பு ஆண்டில் தனது இணையதள விற்பனையில் இணையும் சிறு வியாபாரிகளுக்கு கடன் வசதி வழங்க உள்ளது.
இந்த வசதியை இதற்கு முன் இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் மட்டும் வழங்கி வருகிறது. தற்போது இந்த இணையதளம் இ-காமர்சில் ஈடுபட்டு வரும் இந்தியா, சீனாவிலும் வியாபாரிகளுக்கு குறுகிய கால மூலதன முதலீட்டுக்கான கடன் வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. தனது சந்தை பங்களிப்பை அதிகரித்து தொழிலை விரிவுபடுத்த இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Reporter Jul 2 '15
Reporter
2ஜி வேகத்தில் பார்க்க பேஸ்புக் லைட் அறிமுகம்புதுடெல்லி: இணையதள வேகம் அதிகம் உள்ள 3ஜி, 4ஜி பயன்பாடு வந்துவிட்டாலும் பல இடங்களில் சிக்னல் பிரச்னை உள்ளது. தவிர, அதிக கட்டணம் போன்ற காரணங்களால் பலர் இன்னமும் 2ஜி பயன்பாட்டையே வைத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு பேஸ்புக் லைட் ஆப்சை பேஸ்புக் கடந்த மாத இறுதியில் அறிமுகம் செய்தது. இதை தற்போது இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஆன்டிராய்டு மொபைல்களுக்காக மட்டுமே இந்த லைட் ஆப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Reporter Jul 2 '15
Reporter
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வுமும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் குறியீடு 135 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90.47 புள்ளிகள் உயர்ந்து 27.871.30 புள்ளிகளாக உள்ளது. நுகர்வோர் சாதனங்கள், சுகாதாரம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.08% வரை அதிகரித்துள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17.30 புள்ளிகள் அதிகரித்து 8,385.80 புள்ளிகளாக உள்ளது.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.22% உயர்ந்து காணப்பட்டது. ஹாங்காங்கில் நிதி சந்தைகளில் இன்று மூடப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.13% உயர்ந்து முடிந்தது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.63.68 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது, மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி வநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் அதிகரித்ந்து ரூ.63.64 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Reporter Jul 2 '15
Reporter
விலை குறைவால் வருந்த வேண்டாம், பழம், காய்கறிகளை இனி ஆன்-லைனில் விற்கலாம்புதுடெல்லி: விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்றிகள், பழங்களுக்கு உரியவிலை கிடைக்காமல் இனி கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், இனி பழம், காய்கறிகளை ஆன்-லைனில் விற்கவோ, வாங்கவோ அரசு முறைப்படி அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஆன்-லைன் தேசிய வேளாண் சந்தையை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள்  தங்களின் வேளாண் விளைபொருட்களை மொத்த மற்றும் சில்லரை சந்தைகள், மண்டிகள், சந்தைக் குழுக்களில் மட்டுமே சென்று விற்பதுதான் ஒரே வழியாக இருந்தது. இது சில நேரங்களில் அபரிமித விளைச்சலால் காய்கறி, பழங்களுக்கு உரியவிலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடையும் நிலையும் ஏற்படுவதுண்டு.
இதைப் போக்க தேசிய வேளாண் சந்தை ஆணையம் ஆன் லைனில் வேளாண் சந்தையை உருவாக்கும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஆன்-லைனில் விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொண்டு, நாடு முழுவதும் உள்ள வேளாண் பொருட்களை விற்கவோ, கொள்முதல் செய்யவோ முடியும். இந்த ஆன்-லைன் தேசிய வேளாண் சந்தை ஏற்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு நேற்று அனுமதி அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் வேளாண் பொருட்களை எளிதாக விற்பனை மற்றும் கொள்முதல் செய்யவும், பணப் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தவும், தேசிய வேளாண் சந்தை ஆணையம் முடிவு செய்துள்ளது. 

மேலும்,  ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும், வேளாண் பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும், ஆன்-லைன் கொள்முதல் வசதிகளை உருவாக்கவும் ஆணையம் தீவிரம் காட்டிவருகிறது. அரசின் இந்த முயற்சியால் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக மண்டிகளிலும் விற்கலாம் அல்லது ஆன்-லைனில் விற்பனை செய்து உரியவருக்கு பொருட்களை மாற்றிவிடலாம். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் உயரும், அனைத்து வேளாண் பொருட்களும் தடையின்றி கிடைக்கும்.
Reporter Jul 2 '15
Reporter
அனுமதிக்கப்பட்ட அளவை விட வெங்காய இருப்பு வைக்க மேலும் ஓராண்டு தடைபுதுடெல்லி: நாட்டில் அதிகரித்துவரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்க, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிகமாக வெங்காயத்தை வர்த்தகர்கள் இருப்பு வைக்க தடை செய்யும் சட்டத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெவித்துள்ளது. வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஏற்றுமதி மற்றும் பதுக்கலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் (ஜுலை 2) முடிவடைவதால், இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.  இந்த தடை நீட்டிப்பை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக வெங்காயத்தை பதுக்கும் வர்த்தகர்கள் மீது மாநில அரசுகள் அத்யாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும். அதன் மூலம் விலை உயர்வு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
இந்த உத்தரவு மொத்தம் மற்றும் சில்லரை சந்தைகளுக்கும் பொருந்தும். செப்டம்பர் மாதத்திலிருந்து வடமாநிலங்களில் பண்டிகை காலம் துவங்குவதால் கொள்ளை லாபம் பெற, அதிக அளவு வெங்காயத்தை இருப்பு வைக்க வர்த்தகர்கள் முயல்வார்கள். இதனால், சந்தையில் வெங்காயத்துக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கும். இதைத் தடுக்க அரசு இது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கெனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு ரூ.27 ஆயிரமாக அரசு உயர்த்திவிட்டது. இந்நிலையில் பதுக்கலுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-2014 பருவக்காலத்தில் (ஜூலை-ஜூன்) 194 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 189.23 டன்னாக விளைச்சல் குறைந்தது.
Reporter Jul 2 '15
Reporter
கருப்பு பண வழக்கில் தப்பிக்க செப்டம்பர் 30 வரை கெடுபுதுடெல்லி: கருப்பு பணம், வெளிநாட்டு சொத்து விவரத்தை வெளியிட செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீ்ட்க ‘வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துக்கள் (புதிய வரிவிதிப்பு) மசோதா-2015’ மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது.  இதன்படி வெளிநாட்டு வருமானம், சொத்து மறைத்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை, மறைக்கப்பட்ட வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்கள் மீது 30 சதவீத வரி, 30 சதவீத அபராதம் விதிக்கப்படும். 
சொத்து மறைப்பவர்களுக்கு வரியை விட 3 மடங்கு, அதாவது 90 சதவீதம் அபராதம் 30 சதவீத வரியுடன் விதிக்கப்படும். இந்த சட்டம் அமலாவதற்கு முன்பு வெளிநாட்டு சொத்து, கருப்பு பண விவரங்களை தானாக முன்வந்து அளிக்க அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி, தானாக முன்வந்து கருப்பு பணம், வெளிநாட்டு சொத்து விவரம் அறிவிக்க செப்டம்பர் 30 வரை 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம் விதித்து வழக்கிலிருந்து விடுபட டிசம்பர் 31 வரை அவகாசம் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. 
Reporter Jul 2 '15
Pages: «« « ... 3370 3371 3372 3373 3374 ... » »»